Seed Certification
விதை சேமிப்பு :: சேமிப்பு கிடங்கு சுகாதாரம்

சுகாதாரம் : விதைக்கிடங்கின் பராமரிப்பு வழிகள்

    1. கிடங்கு தூய்மையாகவும், உலர்வாகவும் இருக்கவேண்டும்.
    2. விதைப் பைகளை நேரிடையாக தரையில் இருக்கக்கூடாது. மரப்பலகைகளின் மேல்தான் அடுக்கவேண்டும்.
    3. அடுக்கும் உயரம் 6-8 பைகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும்.
    4. வெவ்வேறு விதைக் குவியல்களை தனித்தனியே வைக்கவேண்டும். மாலத்தியான் 50 இசி (11300 இராசயனம் : நீர்) 5 லிட்டர் சதுர மீட்டர் (அ) 0.25 சதவிகிதம் நுவான் 1 லிட்டர் 100 கனசதுர மீட்டர் என்ற அளவில் கிடங்கில் தெளிக்கவேண்டும்.
    5. வாரத்திற்கு வாரம் இரசாயனங்களை மாற்றி தெளித்தல் நல்ல பலனைத்தரும்.
    6. விதைக் குவியல்களை அலுமினியம் பாஸ்பைட் @ 3 கிராம் / கன சதுர மீட்டர் செலுத்தவேண்டும். இது வருமுன் காக்கும் நடவடிக்கையாகவோ (அ) சிறிய அளவில் தாக்கியுள்ள பூச்சிகளுக்கோ பொருந்தும்.
    7. மாதத்திற்கு ஒர முறை விதைத் தரத்தை ஆய்வு செய்யவேண்டும்.
    8. விதை ஆய்வு முடிவுகளின் படி, ஈரப்பதத்தை நீக்கச் சூரிய ஒளியில விதைகளை உலர்த்த வேண்டும். அப்படிச்செய்வது கிருமி மற்றும் பூச்சித் தாக்குதலை நீக்கும்.
    9. விதை ஆய்வு முடிவுகளின் படி, ஈரப்பதத்தை நீக்கச் சூரிய ஒளியில் விதைகளை உலர்த்த வேண்டும். அப்படி செய்வது கிருமி மற்றும் பூச்சித் தாக்குதலை நீக்கும்.
    10. தொற்று ஏற்படுவதைத் தடுப்பதற்கு புதிய விதைக் குவியல்களை பழையனவற்றிலிருந்து தள்ளி வைக்கவேண்டும்.
    11. பூஞ்சாணக் கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லியின் பிணைப்பு (எ.கா) திரம் 2 கிராம் / கிலோ + கார்பரில் 200 மிகி / கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்யவேண்டும்.
    12. ஒவ்வோர் விதைக் குவியல்களையும் மேற்பார்வையிடுதல் அவசியம்.
    13. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை காற்றோட்ட வசதியை அதிகரிக்கப் பைகளை மீண்டும் மாற்றி அடுக்கவேண்டும்.
    14. சாக்குப் பைகளுக்கு பதிலாக நெய்யப்பட்ட பாலித்தீன் பைகளை உபயோகிப்பது விதைகளின் வாழ்நாளை அதிகரிக்கும்.
    15. பூச்சிக்கொல்லிகள், பூஞ்சாணக் கொல்லிகள், உரங்கள் மற்றும் நிராகரிக்கப்பட்டவை ஆகியவற்றை விதைகளுடன் சேமிக்கக்கூடாது.
    16. ஒவ்வொரு குவியலுக்கும் குறியீடு செய்து தகுந்த ஆவணங்களை பராமரிக்கவேண்டும்.
    17. சிறிய அளவிலான ஒரு ஏக்கர் (அ) ஒரு எக்டர் விதை பைகள் சேமிப்து சுலபமாக கையாள்வதற்கும், மேற்பார்வையிடுதலுக்கும் வசதியாக இருக்கும்.
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.

Fodder Cholam